• Apr 13 2025

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சர்ச்சை பேச்சினால் பரபரப்பு..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் குடும்பத்தில் பெண்கள் அதிகமாக இருப்பது குறித்து ஒரு சர்ச்சையை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். நடிகர் மாத்திரமின்றி பரம்பரை பரம்பரையாகவே கோடீஸ்வரராக இருக்கும் இவர் தற்போது கூறிய ஒரு விடயம் இணையத்தை வைரலாக்கியுள்ளது.


நடிகர் நேர்காணல் ஒன்றில் "வீட்டில் என்னை சுற்றி என் பேத்திகள் இருக்கும்போது ஏதோ பெண்கள் ஹாஸ்டல் வார்டன் போல உணர்கிறேன். என் மகன் ராம் சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையை பெற்றுக்கொள். நமது பரம்பரை தொடர வேண்டும் என கூறியுள்ளேன். மீண்டும் அவனுக்கு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.


இந்த பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரது கருத்துகளை சர்ச்சையானதாக அடையாளம் காட்டி விமர்சனம் செய்துள்ளனர். இருப்பினும் இவர் இது நகைச்சுவையாக பேசிய விடயம் பெரிது படுத்த தேவையில்லை என ஒரு தரப்பு கூறி வருகின்றது.

Advertisement

Advertisement