தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஜெய் ஆகாஷ். இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தை உடையவர். பின் நாட்களில் லண்டனில் குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.
ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மாடலாக பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் .அதன் பின்பு கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ரோஜாவனம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சின்னத்திரையிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம், நெஞ்சத்தைக் கொள்ளாதே போன்ற சீரியல்களில் நடித்தார். தெலுங்கு சீரியலிலும் இவர் நடித்து உள்ளார். ஆனாலும் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான தொடர்கள் குறுகிய நாட்களுக்குள்ளையே முடிவுக்கு வந்தது.
அதிலும் சமீபத்தில் நடிகர் ரேஷ்மா ஹீரோயினாக நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் ஜெய் ஆகாஷ் ஹீராவாக நடித்திருந்தார். ஆனாலும் சுமார் ஆறு மாதத்திற்கு உள்ளையே இந்த சீரியல் முடிக்கப்பட்டது. அதற்கு காரணம் ஜெய் ஆகாஷின் உடல்நிலை என கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜெய் ஆகாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கான ஷூட்டிங் இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் இதற்காக தான் சீரியலை அவசரமாக முடித்தீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!