• Jan 07 2025

தப்ப மறைக்க வேற ஒன்னு பண்ணுறா..! சவுந்தர்யாவுக்கு P.R டீம் நல்லா வேலை செய்யுது!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாள் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அது குறித்து பார்ப்போம். 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக இடம் பெற்ற டிக்கெட் டூ  பினாலே டாக்கில்  ராயன் வெற்றி பெற்றார். கடந்த வாரம் ராணவ் மற்றும் மஞ்சரி எலிமினேட் ஆகினார்கள். தற்போது வீட்டில் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். யார் பைனல் வரைக்கும் போவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தே இருந்து வரும் நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


ப்ரோமோவில் "சோசியல் மீடியா முழுவதும் பேன்ஸ் பேஜ் வைத்து எல்லாம் போட்டுகொண்டு இருக்காங்க என்றால் அது சவுந்தர்யாவுக்கு மட்டும் தான்" என்று முத்து சொல்கிறார். "சவுந்தர்யாவுக்கு பிஆர் டீம் நல்லா ஒர்க் பண்ணி இருக்குனு நினைக்கிறேன்" என்று பவித்ரா சொல்கிறார்.


மேலும் "சவுந்தர்யா தப்பு பண்ணுறா ஆனால் அந்த தப்ப தாண்டி அவள் கிவுட்டா பண்ணுறது நல்லா இருக்கு அதுனால அவளுடைய தப்பு மறைகிறது என்று எனக்கு தோணுது" என ஜாக்குலின் சொல்கிறார். இதனை கேட்ட சவுந்தர்யா தனியாக அழுதுகொண்டு இருக்கிறார். பின்னர் ராயன் மற்றும் அருணிடம் பிஆர்  டீம் வச்சுதான் இவ்வளோ தூரம் வந்து இருக்கேனு சொல்லுறாங்க என்று சொல்லி அழுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 



Advertisement

Advertisement