பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எல்லோரும் கிச்சனில் இருக்க, ஈஸ்வரி ரெஸ்டாரண்டின் கணக்கை பார்க்கின்றார் ஜெனி. இதன்போது ரெஸ்டாரண்டுக்கு இப்போது நல்ல லாபம் வருகின்றது. பொங்கலுக்கு நல்ல ஆஃபர் கொடுக்கலாம் என்று சொல்லுகின்றார்.
இதன் போது அங்கிருந்து ஈஸ்வரி, ராதிகாவை சீண்டி.. நீ கோபியை கவனிப்பதே இல்லை.. நீ கொடுக்கும் சாப்பாடு சரியில்லை என பேசுகின்றார். இதனால் அங்கு வந்த கோபியிடம் ராதிகா நான் செய்த சாப்பாடு சரி இல்லையா? என்று கேட்க. ஈஸ்வரியும் ராதிகா செய்த சாப்பாடு சரியில்லை தானே என்று இருவரும் மாறி மாறி சண்டை போடுகின்றார்கள்.
d_i_a
இதனால் ராதிகா ஈஸ்வரியை கொஞ்சம் வாங்க அத்தை என்று ரூமுக்கு தனியாக அழைத்துச் செல்கின்றார். அங்கு உங்களுக்கு என்ன பிரச்சனை? கோபிக்கு பொண்டாட்டி நான் தான்.. எனக்கு அவரை பார்க்க தெரியும் என்று சரமாரியாக திட்டுகின்றார். இதன்போது கோபி அங்கு வரவும் அப்படியே கதையை மாற்றி விடுகின்றார் ராதிகா.
ஈஸ்வரி ராதிகா திட்டிய அதிர்ச்சியில் பாக்யா அருகில் வந்து பேசாமல் அமர்க்கின்றார். மேலும் பாக்யா எதுவும் கேட்காமல் இருக்க, என்ன நடந்தது என்று கேட்க மாட்டியா? என்று தானே எல்லாத்தையும் புலம்பிக் கொட்டுகிறார். ஆனாலும் இது உங்களுடைய குடும்ப விஷயம் அதில் நான் தலையிட மாட்டேன் என்று பாக்கியா சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் கோபிக்கு ராதிகா மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து அவருக்கு கை, கால்களை அமுக்கி விடுகின்றார். இதன் போது உங்களுடைய அம்மா என்னை எப்போதும் சீண்டிக் கொண்டு உள்ளார். அதனால் கொஞ்சம் சொல்லி வைக்குமாறு சொல்ல, அவரும் சரி என தலையாட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!