• Dec 27 2024

’அந்தகன்’ டிரைலர் ரிலீஸ் தேதியை சொன்ன பிரசாந்த்.. ஆனால் இப்படி ட்விஸ்ட் வச்சிட்டாரே..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் இந்த படத்தின் எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது பிரசாந்த் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரசாந்த் தந்தை தியாகராஜன் 2020 ஆம் ஆண்டு ‘அந்தகன்’ என்ற படத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தார். முதலில் மோகன் ராஜா இந்த படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் வேறு ஒரு இயக்குனர் மாற்றப்பட்டார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தியாகராஜனே இந்த படத்தை இயக்குவதாக அறிவித்தார் என்பதும் ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததால் இந்த படம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராக இருந்தாலும் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றும் இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் உள்ளது.



இந்த நிலையில் தான் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை பிரசாந்த் அறிவித்துள்ளார். ஜூலை 13ஆம் தேதி அதாவது இன்று முதல் ட்ரைலர் ரிலீஸ் ஆகும் என்று பிரசாந்த் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகாது என்றும் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் பிரசாந்த் ட்விஸ்ட் வைத்துள்ளார். ’இந்தியன் 2’ மற்றும் ‘டீன்ஸ்’ ரிலீஸ் ஆகும் அனைத்து திரையரங்குகளிலும் இன்று முதல் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement