• Dec 28 2024

மனோஜிக்கு முத்து விரித்த மாயவலை... வெளுத்து வாங்கிய ரோகிணி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா மனோஜை ஏன் என்கிட்ட பொய் சொன்ன என வெளுத்து வாங்குகிறார். இதனால் ரோகிணி தடுத்து பாவம் விட்டு விடுங்கள் என கெஞ்சுகிறார்.

அதன் பின்பு ரூமுக்கு போன ரோகினி ஏன் இப்படி பண்ணிணா? எனக் கேட்க, இந்த விஷயம் அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும். இன்னொரு விஷயம் சொல்லுவேன் கோவிக்காத என மீனாவின் நகையை விற்று கவரிங்காக மாத்தினது நானும் அம்மாவும் தான் என உண்மையை சொல்லுகிறார். இதனால் கோவப்பட்ட ரோகினி மனோஜை அடி அடி என அடிக்கின்றார். 

மேலும் சும்மாவே முத்து நம்மள விட மாட்டான். இது தெரிஞ்சா நல்லா வச்சு செய்வார் என ரோகினி சொல்லியதோடு, இந்த விஷயம் எனக்கு தெரியும் என உங்க அம்மா கிட்ட சொல்லாத என சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து முத்து கிச்சனிலிருந்து யோசித்துக் கொண்டிருக்க, மீனா இந்த விஷயத்துக்கு மனோஜுக்கும் சம்பந்தமில்லை எனத் தோணுது என சொல்லவும், அப்படி இல்லை அம்மா மனோஜ்ஜ காப்பாற்றி தான் விட்டிருக்காங்க. எனக்கு கண்டிப்பா தெரியும் மனோஜ் தான் நகையை விற்று இருக்கான் என முத்து உறுதியாக சொல்லுகிறார்.

இதையடுத்து நேரே பார்க்குக்கு சென்ற முத்து, அங்கு மனோஜின் நண்பரிடம் காசு கொடுத்த விஷயத்தை விசாரிக்க, அவர் அப்படி எல்லாம் கொடுக்கவில்லை. 30 ஆயிரம் தான் எனது லிமிட் என சொல்கிறார்.

இதனால் இந்த உண்மையை நேரே வந்து மீனாவிடம் சொல்ல, அப்படி என்றால் போய் சாமியாரை பார்ப்போம் அவர் சரியாக சொல்லுவார் என சொல்லவும், வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என கடை ஒன்றில் தேசிக்காய் வாங்கி அதை மஞ்சள் போட்டு கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் முத்து.

இறுதியாக அண்ணாமலை வீட்டில் தனியாக யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ரவியும் ஸ்ருதியும் எல்லாம் சரியாகும் யோசிக்க வேண்டாம் என அவருக்கு ஆறுதல் கூறுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement