• Dec 26 2024

45 வயது முரட்டு சிங்கிள் பிரேம்ஜிக்கு திருமணம்.. சிக்கிய மணமகள் யார்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் பிரேம்ஜிக்கு 45 வயது ஆகும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மணப்பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது என்பதும் ஒரு சில நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் மற்றும் சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் பிரேம்ஜிக்கு பொருத்தமான மணமகளை கடந்த சில ஆண்டுகளாக தேடி வந்ததாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி பிரேம்ஜிக்கு இந்து என்ற பெண்ணை பேசி முடித்து விட்டதாகவும் ஜூன் 9ஆம் தேதி பிரேம்ஜி - இந்து திருமணம் திருத்தணி முருகன் சன்னதிகள் நடைபெறும் என்றும் திருமண பத்திரிகை வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனை அடுத்து 45 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி தற்போது திருமணம் செய்யப்போவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement