• Apr 18 2026

ரோபோ சங்கரை ஓங்கி அறைந்த பிரியா? மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவில் அசிங்கப்பட்ட ரோபோ சங்கர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பணி புரியும் ரோபோ ஷங்கர், கலக்க போவது யாரு என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். இவர், நகைச்சுவை பாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் .

இவர் தன்னுடையை தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்துவார்.

விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார்.


கடந்த ஆண்டு ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென்று உடல் எடை குறைந்து பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். 

எனினும், அதில் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர் தனது செல்ல மகளுக்கு அண்மையில் தான் திருமண நிச்சயதார்த்தத்தை பிரம்மாண்டமாக செய்து வைத்தார்.


இதை தொடர்ந்து திருமண நிச்சயதார்த்ததில் அவரது குடும்பத்துடன் இணைந்து எடுத்த புகைப்படம், வீடியோக்கள் என்பன வைரலாகி வந்தது.

இந்த நிலையில், ரோபோ சங்கர் குடும்பமாக எடுத்த வீடியோ  ஒன்றில், ரோபோ சங்கர் அவரது மனைவி பிரியாவுக்கு முத்தம் கொடுக்க முயல,  அவர் ரோபோ சங்கருக்கு செல்லமாக அறைந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக உள்ளது. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு,




Advertisement

Advertisement