• Dec 26 2024

புது கார் வாங்கிய மறுநாளே படத்துக்கு தடை.. நடிகை பிரியாமணி சோகம்..

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை பிரியாமணி சமீபத்தில் புத்தம் புதிய கார் ஒன்று வாங்கிய நிலையில் அவர் கார் வாங்கிய மறுநாளே அவரது படம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பிரியாமணி தனது சமூக வலைத்தளத்தில் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியதாக தனது தாயுடன் கேக் வெட்டி மகிழ்ச்சி உடன் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



 ’பருத்திவீரன்என்ற திரைப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த பிரியா மணி அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் உருவானஜவான்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை பிரியா மணி புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காரின் புகைப்படத்துடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் இந்த பதிவு செய்த அடுத்த நாள் அவர் நடித்தஆர்ட்டிக்கிள் 370’ என்ற திரைப்படம் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாமி  கவுதம் மற்றும் பிரியா மணி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதை அடுத்து தங்கள் நாடுகளில் தடை செய்வதாக அரபு நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் பிரியாமணி கார் வாங்கிய சந்தோஷத்தில் இருந்தாலும் பெரும் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement