• Dec 27 2024

மலேசியாவில் செம்ம ஹேப்பியாக இருக்கும் ’ரோஜா’ சீரியல் நாயகி.. ரோஜாப்பூ கேக் உடன் சரக்கு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ என்ற சீரியலில் நாயகியாக நடித்த நடிகை பிரியங்கா நல்காரி மலேசியாவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ சீரியலில் நடிக்கும் முன்னர் பிரியங்கா நல்காரி சில தெலுங்கு சீரியல்களில்  நடித்திருக்கிறார் என்பதும் ’ரோஜா’ மூலம் தமிழுக்கு அறிமுகமான அவர் அதன் பின்னர் ’சீதாராமன்’ ’நள தமயந்தி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. அதுமட்டுமின்றி சில டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி, ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிரியங்கா நல்காரி பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் தனது பிறந்த நாளை மலேசியாவில் தனது கணவருடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அதில் ரோஜா பூவில் செய்யப்பட்ட கேக் நடுவில் இருக்க இரண்டு பக்கமும் சரக்கு பாட்டில் இருக்கும் காட்சியை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் காமெடியாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அவர் தனது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடி உள்ளார் என்பது பெரிய வருகிறது. மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது கணவரும் உடன் இருந்தார் என்பதும் அவர் தனது மனைவிக்கு வாழ்த்து கூறிய காட்சிகளும் அந்த புகைப்படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement