தமிழில் வெளியான திட்டம் இரண்டு, அடியே ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரித்த இந்த படம், 2024 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமான ‘ஹாட் ஸ்பாட்’ போலவே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் படம் வெற்றி பெற்று வருகிறது.

இந்த படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படம் நாளை முதல் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி ரசிகர்களிடையிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார், அனில் ரெட்டி மற்றும் ராபின் ஆகியோர், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு மகேந்திரா எக்ஸ்யூவி சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.
Listen News!