• Apr 24 2026

ரூம் கிடைத்ததை செலிபிரேட் செய்த முத்து, மீனா – மனோஜ் போனில் சிக்கிய ரகசிய வீடியோ!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவும்  மீனாவும் சத்யாவை அனுப்பி வைத்து, க்ரிஷுடன் வீடியோ காலில் பேசுகின்றனர். இதன்போது, சத்யா அங்கிருந்து திரும்பி வரும்போது, ரோகிணியின் வீட்டிற்குள் சிந்தாமணி இருப்பதை பார்த்துவிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து, ரூம் கிடைத்த சந்தோஷத்தில் மீனாவும் முத்துவும் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை செம்ம குஷியாக ஆரம்பிக்கின்றனர். ஆனால் மனோஜ் வெளியில் தூங்குவதற்கு கஷ்டப்படுகிறார்.

மேலும், அவருடைய கனவில் ரோகிணி வந்து அவரை விரட்டுவது போல கனவு கண்டு அலறுகிறார். இதனால் விஜயா உடனடியாக வந்து, “கனவிலும் கூட அவள் வரக்கூடாது” என மனோஜை திட்டுகிறார்.


அதன்பின், மனோஜின் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த விஜயாவுக்கு ஒரு வீடியோ கண்ணில் படுகிறது. அதில் ரோகிணியும் மனோஜும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது விஜயாவுக்கு தெரியவில்லை.

இது ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று மனோஜ் கூறினாலும், விஜயா அதை நம்பவில்லை. மேலும், “நான் உனக்கு டிவோஸ் வாங்க காத்திருக்கிறேன். நீ ரோகிணியுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறாயா?” என்று கூறி மனோஜை அடிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement