• Dec 25 2024

ரொக்கெட் ரேஞ்சில் எகிறும் புஷ்பா 2 கலெக்சன்..! 14 நாட்களில் இத்தனை கோடியா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

2011 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகவும், பகத் பாஸில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஆயிரம் கோடிகளை கடந்து இருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் கடந்த டிசம்பர் நான்காம் தேதி வெளியானது. அதுவரையில் வேற எந்த படத்திலும் நடிக்காத அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்திற்காகவே தனது முழு உழைப்பையும் கொட்டியுள்ளார்.

d_i_a

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டிக்கெட் புக்கிங் இல் ஆயிரம் கோடிகளை வசூலித்து இருந்தது. மேலும் முதல் நாளிலேயே 247 கோடிகளை வசூலித்து ஒட்டுமொத்த திரை உலக நடிகர்களின் ப்ளாக் ஆபீஸ் வசூலை முறியடைத்திருந்தது.


இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் 14 நாட்களுக்கான மொத்த கலெக்ஷன் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி புஷ்பா 2 திரைப்படம் இதுவரையில் மொத்தமாக 1409 கோடிகளை வசூலித்து உள்ளது. 

இன்னும் ஒரு சில நாட்களிலேயே இந்த திரைப்படம் 2000 கோடிகளை கடந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement