• Oct 26 2024

'புஷ்பா 2' ற்கு தொடரும் நெருக்கடி.. ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்? ஆனா ஹாப்பி நியூஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்திய திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி தமிழ், இந்தி என பலரைக் கவர்ந்த படமாக இந்த படம் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் சில ஆண்டு காலமாக இயக்கி வருகின்றார். அஜித் நடிக்கும் குட்பேட் அக்லி படத்தை தயாரிக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது.

செம்மரக்கட்டையை கடத்தும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக வில்லன் கேரக்டரில் பகத் பாசில் மொட்டை தலையுடன் மிரட்டி இருந்தார். ஸ்ரீ வள்ளி கேரக்டரில் ராஷ்மிகா மந்தானா பலரையும் கவர்ந்திருந்தார்.


மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் சமந்தா போட்ட குத்தாட்டம் ராஷ்மிகா மந்தானாவை விட அவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் ஆறாம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பாகவே டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மூன்றாவது பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை தயாரிப்பாளரே  சமீபத்தில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement