• Dec 26 2024

விஜய் டிவியின் இமாலய நம்பிக்கை ஒரேடியாக சரிந்தது! TRPல் கெத்து காட்டும் சன்டிவி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் விஜய் டிவி, சன் டிவி சீரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இந்த சீரியல்களுக்கு என்று இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை ரசிகர்களாக காணப்படுகின்றார்கள்.

தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெறுவதற்காக விஜய் டிவி, சன் டிவி சேனல்களுக்கு இடையே போட்டி நிலவி வருகின்றது. இதற்காகவே புதிதான கதைகளத்துடன் பல  சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றன.

அதிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் நாளடைவில் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்தால் அந்த சீரியல்களை சட்டென முடித்துவிட்டு அடுத்த புது சீரியல்களை களம் இறக்குவதில் ஈடுபடுவார்கள்.

அதன்படி சமீபத்தில் விஜய் டிவியில் முத்தழகு சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வீட்டுக்கு வீடு வாசற்படி, மலர் விழும் பணிவணம் என்று புதிய சீரியல்களை களம் இறக்கினர். அதேபோல சன் டிவியிலும் மருமகள், மூன்று முடிச்சு, மல்லி  போன்ற சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.


இந்த நிலையில், தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் பத்து இடங்களை பெற்ற சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளன. அதில் வழமை போல சன் டிவி சீரியல்கள் தான் முன்னிலை வகிசிக்கின்றன.

அந்த வகையில் கயல் சீரியல் 11.8 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் காணப்படுகின்றது. இரண்டாவதாக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் இரண்டாவது இடத்திலும், இதுவரை காலமும் முதலாவது இடத்தில் காணப்பட்ட சிங்கப் பெண்ணே சீரியல் மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து மருமகள் சீரியல் நான்காவது இடத்திலும், சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்திலும், இராமாயணம் ஆறாவது இடத்திலும் காணப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை ஏழாவது இடத்தைப் பெற்று சரிவை சந்தித்துள்ளதோடு, எட்டாவது இடத்தில் மல்லி சீரியலும், ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலும், 10வது இடத்தில் சின்ன மருமகள் சீரியலும் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement