• Dec 26 2024

ரச்சிதாவ தவறா வழி நடத்துறாங்க.. இது தான் உண்மையான காரணம்.! தினேஷின் பெற்றோர் கதறல்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ்.

இந்த நிலையில், தினேஷின் பெற்றோர் ரச்சிதாவிற்கும் தினேஷிற்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து பேசி இருக்கிறார்கள்.அதன்படி அவர்கள் கூறுகையில், 


'ரச்சிதாவை நாங்கள் ஒரு குறை கூட சொல்ல மாட்டோம். அவளுடைய கேரக்டர் ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட, அவர் தற்போது தவறான வழி நடத்துதலின் கீழ் இருக்கிறார். அதனால்தான் தினேஷும் ரச்சிதாவும், தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். இது எத்தனை நாளுக்கு இருக்கும் என்பதை தெரியவில்லை.ரச்சிதாவின் உறவினர்கள் எல்லோருமே மிகவும் அருமையான நபர்கள். சிலரை தவிர.. 

அதனால் நாங்கள் அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்ல மாட்டோம். தற்போது போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்து இருக்கிறார்கள். வருவது வரட்டும். தினேஷ் உண்மையில் மிகவும் தெளிவான ஆள். நாங்கள் இந்த விஷயம் குறித்து ஏதாவது சொல்லும் பொழுது கூட, அப்பா அது அப்படித்தான் இருக்கும். நீங்கள் பொறுமையாக இருங்கள் என்று சொல்வார்' என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement