• Dec 26 2024

கணவரை பிரிந்து புது வீட்டில் ஒயின் அடித்த ரச்சிதா! விதம் விதமாய் வெளியிட்ட வீடியோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா  மகாலட்சுமி. இவர் இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்த ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு மேலாக இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக தற்போது இருவரும் பிரிந்து உள்ளார்கள்.

ஆனாலும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் மீண்டும் இவருடன் இணைவதற்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி அந்த வீட்டிலும் தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. 


அத்துடன் தனது தந்தையை இழந்த நடிகை ரச்சிதா இனி எனக்கு அம்மா மட்டும்தான் என்பது போல போஸ்ட் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். அதை தொடர்ந்து தனிமையில் உள்ள வீடியோக்களை மட்டுமே தொடர்ந்து போஸ்ட் பண்ணி வந்தார்.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய இவர், கன்னட திரைப்படத்தில் நடித்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.


இதை தொடர்ந்து இன்றைய தினம் நடிகை ரச்சிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான ஃபயர் படத்தின் பிலிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் படு மோசமான  கவர்ச்சி நிலையில் நடிகை ரச்சிதா காணப்படுகிறார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ரச்சிதா மகாலட்சுமி சொந்தமாக புது வீடு ஒன்றை வாங்கிய நிலையில் வீட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதோடு, இன்றைய தினம் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை மனமார தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement