• Dec 26 2024

உண்மையை உடைத்த ராதிகா! கோபியை பழிவாங்க பழனியை கல்யாணம் செய்வாரா பாக்கியா? காரி துப்பும் ரசிகர்கள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே  உண்டு. இல்லத்தரசிகளாலும் நல்ல வரவேற்பை பெற்று  ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியல் பாக்கியலட்சுமி என்ற பெண்ணை மையமாகக் கொண்டு, அவர் படும் கஷ்டங்கள், வீட்டில் எதிர் நோக்கும்  பிரச்சினைகள், பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்பவற்றையும் தாண்டி விவாகரத்தான கணவருக்கு முன்னால் ஒடுங்கி உட்காராமல் தனது விடா முயற்சியினால் தற்போது ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்து தொழிலதிபராக காணப்படுகிறார்.

இந்த சீரியல் ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி கதையை கொண்டு நகர்வதால் விறுவிறுப்பாகவும் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று நகர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் பாக்கியா சமாளிக்கும் போதும் ஒரு அளவுக்கு ரசிகர்களால் வரவேற்பு பெற்றது

ஆனால் தற்போது இந்த சீரியலில் கோபி இன்னொரு கல்யாணம் பண்ணியதோடு மட்டுமில்லாமல் அவர் தற்போது மீண்டும் அப்பாவாக போகிறார். ஏற்கனவே செழியனுக்கு குழந்தை கிடைத்து அவர் தாத்தாவான நிலையில், தற்போது மீண்டும் அவர் அப்பாவானதை நினைத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.


இதன் காரணமாக இந்த சீரியலை முற்றாக வெறுத்து வருகின்ற ரசிகர்கள், டைரக்டர் மட்டுமின்றி இதில் நடிக்கும் நடிகர்களையும் கண்டபடி திட்டி வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், பாக்கியலட்சுமி ஊறுகாய் செய்து கொண்டு இருக்க, அதனை கேட்டு விரும்பி உண்ணுகிறார் ராதிகா.

அந்த நேரத்தில் ராதிகாவின் பிள்ளை மயூ அங்கு வந்து, ஏனம்மா ஒரே புளிப்பா சாப்பிடுறீங்க என்று கேட்க, பாக்யாவுக்கு சந்தேகம் வருகிறது.

மேலும் மொட்டை மாடியில் பாக்கியா துணி காய போட்டுக் கொண்டிருக்க, அங்கு ராதிகா தனது அம்மாவிடம் ஃபோனில் என்ன பண்ணினாலும் வாந்தி நிற்கவே மாட்டேங்குது என்று சொல்வதை கேட்கின்றார்.

இதை அடுத்து மாடியில் அவர் தலை சுற்றுவது போல காட்டப்படுவதோடு, பாக்கியா ராதிகாவிடம்  நேரடியாகவே நீங்கள் கர்ப்பமா இருக்கீங்களா என்று கேட்க, டாக்டரிடம் போனோம் அவரும் கன்ஃபார்ம் பண்ணி விட்டார் என சொல்லுகிறார் ராதிகா.

இவ்வாறு இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிந்த நிலையில், வீட்டார் இனி என்ன சொல்வார்கள் என்றும், இனி ராதிகாவையும் பாக்கியா தான் கவனிக்க போகின்றாரா? அல்லது கோபியை பழிவாங்க பழனியை கல்யாணம் செய்வாரா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே இந்த சீரியல் தற்போது படுமோசமாக செல்வதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement