பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா உடன் கோபி பார்க்கில் இருந்து பேசுகின்றார். இதன்போது நீ இவ்வளவு ஸ்மார்ட் என்று தெரியவில்லை. தெரிந்து இருந்தால் உன்னை விட்டு போயிருக்க மாட்டேன். உன் கூடவே இருந்திருப்பேன் என்று சொல்ல, இதனை பின்னால் இருந்த ராதிகா கேட்டுவிட்டு கோபத்தில் செல்கின்றார்.
இதன் போது பாக்கியா நீங்க என்ட லைஃப்ல செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயம் என்ன விட்டுப் போனது தான். ஏன் உங்களை காப்பாத்தினேன் என்று யோசிக்க வைக்க வேண்டாம் என்று திட்டி விட்டுச் செல்கின்றார்.
இன்னொரு பக்கம் பாக்கியா உடன் கோபி மீண்டும் சேர்ந்து விட்டாரா என்று பார்க்கில் உள்ளவர்கள் ராதிகாவை கேள்வி கேட்கின்றார்கள். இதனால் வீட்டுக்கு வந்த ராதிகா நாம வீட்டை காலி பண்ணி விட்டு வேறு இடத்திற்கு போவோம். இதுக்கு மேல என்னால் அசிங்கப்பட முடியாது. கோபிக்கும் அட்ரஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்.
இதைத்தொடர்ந்து பாக்யா கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க அங்கு பேப்பர் படிப்பது போல பாக்யாவை சைட் அடிக்கின்றார் கோபி. இதனை பார்த்த செல்வி பாக்யாவிடம் சொல்லுகின்றார். அதன் பின்பு பாக்யா சமைக்கும் வாசத்தை பார்த்து கோபி என்னால் சாப்பிட முடியவில்லை என்று ஃபீல் பண்ண, உனக்கும் சேர்த்து தான் பாக்கியா சமைக்கின்றார் என்று ஈஸ்வரி ஒரு குண்டை தூக்கி போடுகின்றார்.
அதன் பின்பு தனக்கு பசிக்கின்றது என்று சாப்பாடை போட்டுக் கொண்டு வந்து கோபிக்கு கொடுக்கின்றார். மேலும் பாக்கியா தான் உனக்கு போட்டு தந்ததாக பொய் சொல்கின்றார். அதன் பின்பு இறுதியாக ஒரு முறை கோபி உடன் கதைத்து விட்டு போகலாம் என்று ராதிகா வீட்டுக்கு வர, அவரை தடுத்து நிறுத்துகின்றார் ஈஸ்வரி. ஆனாலும் பாக்கியா அவரை உள்ளே அனுப்பி வைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!