சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவை காணவில்லை என்று மீனா சத்யா உடன் ஒவ்வொரு இடமாக திரிகின்றார். இறுதியில் முத்து குடித்திருப்பாரோ அந்த சந்தேகத்தில் பாருக்கு சென்று பார்க்கின்றார். ஆனால் அங்கு முத்து இல்லை. அங்கு உள்ளவர்கள் மீனாவை ஒரு மாதிரி பார்த்து காசு கேட்கின்றார்கள்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனாவிடம் சீதாவும் அவருடைய அம்மாவும் போன் பண்ணி ஆறுதல் சொல்லுகின்றார்கள். முத்து திடீரென தூர இடத்திற்கு சவாரி சென்று இருப்பார். அப்படி இல்லை என்றால் சாமிக்கு நேர்ந்துவை என்று மீனாவின் அம்மா சொல்லுகின்றார்.
அந்த நேரத்தில் முத்து சரியாக உள்ளே வர, அண்ணாமலை அவரை அழைத்து, இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தா?. மீனா ஒவ்வொரு இடமா தேடி தெரிஞ்சா... உன்னுடைய போனுக்கு என்ன நடந்தது? என்று கேள்வி கேட்டு அவருக்கு நான்கு அடியும் போடுகின்றார்.
அதற்கு முத்து ஃபோனில் சார்ஜ் இல்லை தான் தூர சவாரி சென்றதாக சொல்கின்றார். இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தால் மீனா அழுது இருப்பார் என்று அண்ணாமலை சொல்லி உள்ளே செல்கின்றார். அதன் பின்பு மீனா சாப்பிட கூப்பிட, தான் வேணும் என்று தான் போனை ஆஃப் பண்ணி வைத்தேன் என்று சொல்லுகின்றார் முத்து.
மேலும் உன்னை விட அதிகமாக இன்றைக்கு 8000 ரூபாய் சம்பாதித்துள்ளேன் என்று சொல்ல, அப்படி என்றால் பிரச்சனை ஃபோனில் இல்லை என் மீது தானே. நீங்களும் ஏனைய ஆம்பளைகளை போலத்தான் என்று மீனா அழுகின்றார். அதன் பின்பு முத்துவை சாப்பிட கூப்பிட அவர் சாப்பிட்டு வந்து விட்டதாக சொல்ல, கோபத்தில் மீனா தூங்கச் செல்கின்றார். அதன் பின்பு முத்து அவரை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார். இன்றைய எபிசோட்.
Listen News!