• Feb 27 2025

தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்த ரஜினி..!

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

"வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை " என்னதான் வயசு 70 தாண்டினாலும் கையில் வரிசையில் படத்தை வைத்திருக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார்.


அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த இரு படங்களும் முடிந்த பின்னர் dawn pictures தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது ரஜினி கூலி பட சூட்டிங் பின்னர் மூன்று மாதங்கள் ஒய்வு எடுக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.


குறித்த ஒய்வு நேரத்தினை தனது சுயசரிதையினை ரஜினி எழுதவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆரம்பங்களில் ஒரு எழுத்தாளரை வைத்து இவர் தனது சுயசரிதையினை எழுத ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்ததுமே அதனை நிறுத்தியுள்ளதாகவும் இதற்கான காரணம் சுயசரிதை எனின் பல உண்மைகளினை மறைக்காமல் எழுதவேண்டும் அதன் காரணமாக தயங்கியுள்ளதாகவும் எனினும் மீண்டும் அதனை எழுத ஆரம்பிக்க போவதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement