மலையாள திரையுலகின் நகைச்சுவை நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் பல்வேறு பதவிகளில் திரையுலகில் வலம் வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று (டிசம்பர் 20, 2025) காலமானார். இவரது மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

ஸ்ரீனிவாசன் தனது திரையுலக பயணத்தை 1970 ஆம் ஆண்டு தொடங்கினார். 1970 களில் மலையாள சினிமாவில் வந்த இவர், தனது நடிப்பால் மட்டுமின்றி, திரைக்கதைகளின் தனித்துவத்தாலும் கவனத்தை ஈர்த்தார். அவரது பன்முக திறமை, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக மாறி, அவருக்கு மதிப்பை வழங்கியது.
1970 - 2025 வரை, ஸ்ரீனிவாசன் 225க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு, காமெடி என்பன மலையாள திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.

இந்நிலையில், ஸ்ரீனிவாசன் மறைவுக்கு திரையரங்கின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அதன்போது, "ஸ்ரீனிவாசன் இறந்த செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இருவரும் ஒன்றாக சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்தோம். மிகச் சிறந்த நடிகர்.நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று கூறியுள்ளார்.
Listen News!