• Apr 19 2026

நீயெல்லாம் நாகேஷ் புள்ளையாடான்னு கேட்டாங்க.. யாருமே நம்பல.! நடிகர் ஆனந்த்பாபு ஓபன்டாக்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ஆனந்த் பாபு, சமீபத்தில் தனது காலேஜ் அனுபவத்தை பகிர்ந்து, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் ஒரு பேட்டி வாயிலாக கூறிய இந்த சம்பவம், சுவாரஸ்யமாக இருந்ததோடு, அவரது தனித்துவமான கலைஞர் தன்மையை வெளிப்படுத்துகிறது.


ஆனந்த் பாபு தனது பேட்டியில்," நான் காலேஜுக்கு போனதும் என்கிட்டே பாட்டுப் பாட தெரியுமான்னு கேட்டாங்க. தெரியாதுன்னு சொன்னேன். உனக்கு டான்ஸ் ஆவது ஆடத் தெரியுமான்னு கேட்டாங்க.தெரியாதுன்னு சொன்னேன். 

உடனே நீயெல்லாம் நடிகர் நாகேஷ் ஐயாவோட பிள்ளையாடான்னு கேட்டதும் சுருக்குன்னு ஆகிடுச்சு. அன்னையோட நான் அப்பா புள்ளைன்னு நிரூப்பிக்கணும்னு யோசிச்சு டான்ஸ் ஆடத் துவங்கினேன்." என்று கூறியிருந்தார்.


ஆனந்த் பாபு பகிர்ந்த இந்த அனுபவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனந்த் பாபு தமிழ்த் திரையுலகில் பல வேடங்களில், பன்முக திறமையுடன் நடித்துள்ளார். பாடல், நடனம், நடிப்பு, காமெடி உள்ளிட்ட பல துறைகளில் அவரது திறமைகள் வெளிப்பட்டு, ரசிகர்கள் அவரை மதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement