தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக். அந்த படத்தை தொடர்ந்து ரங்கூன், இவன் தந்திரன், என்னமோ ஏதோ, பத்து தல போன்ற பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வேரூஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் அறிவியல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள படம் தான் ரூட். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் நேற்றைய தினம் அதிகார்வபூர்வமாக வெளியிட்டார்.

ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று போயஸ் கார்டனில் உள்ள தமது இல்லத்தில் படக்குழுவினர் புடைசூழ, வண்ணமயமான இந்த போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
மேலும் படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகளையும் ரஜினி காந்த் நேரில் கண்டு களித்துள்ளார். படத்தின் காட்சிகளை பார்த்து வியந்த அவர், படக் குழுவை பாராட்டி உள்ளார். மேலும் இந்த படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Listen News!