• Apr 18 2026

டிக்கெட் டூ பினாலேவில் புகுந்து விளையாடும் அரோரா.. இறுதி இடத்தில் கானா வினோத்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின்  9வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.  இந்த சீசனில் எஞ்சி உள்ள ஒன்பது போட்டியாளர்களும் எப்படியாவது டிக்கெட் டூ பினாலேவை வென்று விட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் பிக் பாஸ் தரப்பிலும் கடுமையான போட்டிகள்  கொடுக்கப்பட்டு வருகின்றன.  டிக்கெட் டூ பினாலேவின் ஐந்தாவது டாஸ்க் பார்வதி வெற்றி பெற்றார்.  அவருக்கு அடுத்து திவ்யா  இரண்டாவது இடத்தை பெற்றார். 

இந்த நிலையில், டிக்கெட் டூ பினாலே ஏழாவது டாஸ்க்கில்  அரோரா ஒன்பது புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் கொடுக்கப்பட்ட ஐ க்யூ  கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லி அவர் வெற்றி பெற்றுள்ளார்.


அதன்படி இறுதியாக  இடம்பெற்ற டாஸ்க்கில் சபரி ஏழு புள்ளிகளும், சாண்ட்ரா எட்டு புள்ளிகளும், அரோரா ஒன்பது புள்ளிகளும், விஜே பார்வதி 5 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

மேலும் விக்ரம் நான்கு புள்ளிகளையும், சுபிக்ஷா 6 புள்ளிகளையும், கமருதீன் ஒரு புள்ளியும், திவ்யா 2 புள்ளியும் இறுதியாக கானா வினோத் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளார். 

இந்த வாக்குகளின் அடிப்படையில்  சபரி 42 புள்ளிகளுடன் முதல் இடத்தில் காணப்படுகின்றார்.  அடுத்து சாண்ட்ரா  39 புள்ளிகளையும், அரோரா 39 புள்ளிகளையும் பெற்றுள்ளார். மேலும் இறுதியாக கானா வினோத்துக்கு 25 புள்ளிகள் காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement