• Dec 26 2024

அஜித் அளவுக்கு இறங்கி அடிக்கும் ராமராஜன்.. ‘சாமானியன்’ டிரைலர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அட்டகாசமாக காண்பித்த ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அஜித் அளவுக்கு இறங்கி ஒரு வங்கி கொள்ளை படத்தில் நடிகர் ராமராஜன் நடித்துள்ளார்.

அவர் நடித்த ‘சாமானியன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான ட்ரெய்லர் வந்துள்ள நிலையில் அதில் அட்டகாசமான வங்கி கொள்ளை காட்சிகள் இருப்பதும் அந்த வங்கிக் கொள்ளைக்கு பின்னால் ஒரு சென்டிமென்ட் காட்சி இருப்பதும் தெரிய வருகிறது. 

ஒரு வங்கியை மொத்தமாகவே கொள்ளை அடிக்கும் ராமராஜன், அவரை சுற்றி வளைக்கும் காவல்துறையினர், கொள்ளையனை பிடித்தார்களா? கொள்ளையனின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. 

நீண்ட இடைவெளி ரீஎண்ட்ரி ஆகும் ராமராஜன் ஒரு அட்டகாசமான திரில்லர் படத்தில் நடித்துள்ளதை அடுத்து அந்த படம் எந்த அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த படத்தின் டிரைலரில் உள்ள வசனங்கள் இதோ:

இந்த உலகத்துல நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன், மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற ஒரு புண்ணாக்கும் கிடையாது, இந்த உலகத்துல ரெண்டே ரெண்டு ஜாதி தான், ஒன்று பணம் கொடுக்கிறவன், இன்னொரு பணம் வாங்குறவன். இரண்டு பேருக்கு இடையில தான் இந்த உலகமே இயங்கிக்கிட்டு இருக்கு.

இந்த காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னால் பிடிக்காது, ஆனால் தப்பு என்று தெரிஞ்சும் அறிவுரை சொல்லாமல் இருப்பது எனக்கு பிடிக்காது.




Advertisement

Advertisement