• Dec 26 2024

ராம்சரனின் அடுத்த படம் என்ன தெரியுமா ? படப்பிடிப்பு ஆரம்பம்

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் ஆவார் . இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரின் நடனம் மற்றும் ஸ்டைலான நடிப்புக்கென தெலுங்கில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது

 ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த "மாவீரன்" திரைப்படம் தமிழ் நாட்டிலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது. இவ்வாறு தமிழ் ,தெலுங்கு என ஹிட் கொடுத்து வந்த  ராம்சரணுக்கு உலகம் முழுவதும்  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் NTR உடன் இவர் சேர்ந்து நடித்த" RRR  "திரைப்படமே ஆகும். இதில் அவர்  யதார்த்தமான நடிப்பையும் ,மிரட்டலான ஆக்க்ஷன் காட்சிகளையும் ,அருமையான நடனத்தையும் வெளிப்படுத்தி இருப்பார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் இல் 1000 கோடியை கடந்து வசூல் சாதனையையும் செய்திருந்தது 

இவ்வாறு" RRR "படத்தின் வெற்றியை தொடர்ந்து.  ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த" GAME CHANGER "திரைப்படமானது ரிலீஸ் ஆக  உள்ள நிலையில் ராம்சரண் நடிக்கும் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே  அதிகமாகவே இருந்தது 

இந்த நிலையிலேயே AR  ரகுமான் இசையில் ,புச்சி பாபு இயக்கத்தில் ஜான்வி கபூர் உடன் இணைந்து" RC 16 "திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள்  வெளிவந்திருந்த நிலையில் இதன் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்க்கான   பூஜை நடைபெற்று முடிந்துள்ளது . இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement