• Oct 26 2024

தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட ராயன் திரைப்படம்! ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி பன்முகத்தன்மை கொண்டு ஜொலித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை தனுஷே  இயக்கியிருந்தார்.

பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்துள்ளார்.

ராயன் படத்தில் தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

ராயன் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் சுமார்  126 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. அதிலும் இந்த திரைப்படம் முதலாவது வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலித்திருந்தது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது.


தற்போது பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட ராயன் திரைப்படம் அடுத்ததாக ஓடிடி ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இன்றைய தினம் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் இனி வரும் நாட்களில் ராயன் திரைப்படத்திற்கான வரவேற்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement