விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல கலைஞர்கள், திறமையானவர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தி உள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கப்பட்டு எளிமையாக முடிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் தங்களுக்கு ஏற்ற விதத்தில் ஒவ்வொரு விதத்திலும் பிரபலமாக காணப்படுகின்றார்கள். அதன்படி பாடல், ஆடல், சீரியல் என்று மட்டும் இல்லாமல் வெள்ளித் திரையிலும் ஜொலித்து வருகின்றார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய அர்ச்சனா,கவின்,லொஸ்லியா, ஜனனி ஆகியோர் வெள்ளி திரையில் பிஸியாக நடித்து வருகின்றார்கள். இவர்களுக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி, இதனால் பலரும் பிக்பாஸில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருவார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் பிரபலமும் இலங்கையின் ராப் பாடகருமான ADK தனது இன்ஸ்டா பக்கத்தில், உண்மையான திறமைக்கு இடமில்லை என்று உருக்கமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.
அதில் அவர் கூறுகையில், உண்மையான திறமையானவர்களுக்கு மட்டும் அங்கீகாரம் கொடுங்கள்.. பல கலைஞர்கள் அங்கீகாரம் இல்லாமல் காணப்படுகின்றார்கள். அவர்களை அழைத்து வெளி உலகிற்கு காட்டுங்கள்.
அதை விடுத்து காசு கொடுத்து தன்னை ஃபாலோ பண்ண சொல்லுபவர்கள், என்னை தெரியுமா என்று கேட்டு ப்ரோமோட் பண்ணுபவர்கள் அவர்களை விடுத்து உண்மையான கலைஞர்களை தேடி பிடியுங்கள். இல்லையென்றால் இதுபோல் முட்டாள் தனமான ஆட்களால் அவர்கள் அழிந்தே போய்விடுவார்கள் என்று சொல்லியுள்ளார்.
Listen News!