• Jan 22 2025

கவினின் கேரியரை புரட்டிப்போட்ட படங்கள்..? கடும் சிக்கனத்தில் தயாராகும் அடுத்த படம்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்த பிரபலங்கள் ஏராளம். அவர்களுள் முக்கியமான ஒருவராக கவின் காணப்படுகின்றார். இவர் லிப்ட் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார். அதன் பின்பு பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கு பற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பண பெட்டியுடன் வெளியேறி இருந்தார்.

d_i_a

இதை தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி முதலாவதாக லிப்ட் படத்தில் நடித்தார். அதன் பின்பு டாடா படம் இவரின் கேரியரில் முக்கிய திரைப்படமாக காணப்படுகிறது. அதில் மனைவியை பிரிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார்.


அதன் பின்பு கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. மேலும் பிளடிபக்கர் திரைப்படம் நெல்சன் இயக்கத்தில் வெளியானது. இந்த படத்தில் யாசகர் போல நடித்திருந்தார். ஆனாலும் இந்த படமும் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், கவின் நடிப்பில் இறுதியாக வெளியான 2 படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்த வெளியாக உள்ள படம் சிக்கனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலைப்பேச்சு அந்தணன் தெறிவித்துள்ளார். 

தற்போது அவர் கிஸ் என்ற படத்தில் நடித்து வருவதாகவும் அதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் இதன் போதே கவினின் இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததால் இந்த படத்தின் பட்ஜெட்டை சிக்கனப்படுத்தி உள்ளார்களாம் என தகவல் வெளியிட்டு உள்ளார்.

Advertisement

Advertisement