• Dec 25 2024

விஷால்-தர்ஷிகா காதல்! ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க! உண்மையை போட்டுடைத்த ரியா!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ்-8 நிகழ்ச்சியில் வையில் கார்ட் போட்டியாளராக சென்ற பிரபலம் ரியா. இவர் பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற பின்னர் கண்டன்ட் தருவார் என்று எதிர்பார்த்தால் அவர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனை அடுத்து கடந்த வாரங்களில் வெளியேறினார். 


இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சில விடையங்களை பகிர்ந்துள்ளார். நான் சில விஷயங்கள் அந்த வீட்டுக்குள்ள பண்ணியிருக்கேன்னு எனக்குத் தெரியுது. அப்படி இருக்கும்போது, `பலர் சும்மா இருந்தாங்களே...’ என்னை ஏன் அனுப்பினாங்கங்கிற கேள்வி எனக்குள்ள இருந்தது. நான் வெளியில வருவேன்னு நான் நினைக்கவே இல்ல. 


அந்த டைம் வர்ஷினி இல்லைன்னா ரஞ்சித் சார் தான் எவிக்ட் ஆவார்னு நினைச்சிருந்தேன். கொஞ்சமும் எதிர்பார்க்கல அதை இந்த இடத்துல முதலில் தெளிவுபடுத்திக்க விரும்புறேன்.பிக் பாஸ் வீட்டுல காதல் இருக்கு ராணவ் - பவித்ரா லவ்னு ஸ்கூல் டாஸ்க்ல பண்ணதெல்லாம் சும்மா. ஏன்னா பவித்ரா இது வேண்டாங்கிறதுல ரொம்ப கிளியர் ஆக இருந்தாங்க. அதனால அது ஒரிஜினல் கிடையாது. ஆனா, விஷால் - தர்ஷிகாவுக்கு இடையில் அப்படி இல்ல. 


ஸ்கூல் டாஸ்க் பண்ணும்போது அவங்க விளையாட்டா ஆரம்பிச்சாங்க. 2 1/2 நாள் அந்த டாஸ்க் போச்சு. ஒரே வீட்ல அவங்க லவ்வர் ஆக ஒரே மாதிரி இருந்தாங்க. அந்த டாஸ்க் முடிஞ்ச பிறகும் அவங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு அப்படியே தான் இருந்தாங்க. அவங்களுக்குள்ள இருக்கிற லவ் உண்மை தான். அது போகப் போக வெளிப்படையா தெரியும்., தெரியவரும் என்று கூறியுள்ளார்.  



Advertisement

Advertisement