• Dec 25 2024

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் விஜய்...! தீயாய் பரவும் அப்டேட்...!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது பயோபிக்காக வாழை என்ற திரைப்படத்தினை எடுத்தது வெற்றி கண்டார். அதற்க்கு முன்னரே அவர் கொடுத்த கர்ணன், மாமன்னன், பரியேறும் பெருமாள் என்பன அரசியலை மறைமுகமாக சுட்டிக்காட்டி வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற்று மாரிசெல்வராஜ் வெற்றி இயக்குனராக வலம்  வந்தார்.


இந்த படத்திற்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ விக்ரமை வைத்து 'பைசன்' எனும் படத்தினை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்களை இயக்க ஏற்கனவே மாரி செல்வராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மாரி செல்வராஜ் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து புதிய படத்திற்கான கதை குறித்து பேசி வருவதாக தகவல் பரவி வருகிறது. விஜய் சேதுபதிக்கு கதை பிடித்துள்ளதால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Advertisement

Advertisement