• Dec 25 2024

என்னது சூர்யா 45ல் மூன்று ஹீரோயின்களா! ஹை லெவலாக பிளான் போட்ட RJ. பாலாஜி...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளார. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும். இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்குகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நடிகை காஷ்மீரா பரதேசி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது இப்போது இந்த படத்தில் 3 நடிகைகள் இதப்பதாகவும் மேலும் இணையும் 2 நடிகைகள் குறித்து அப்டேட் வெளியாகி இருக்கிறது.


சீதாராமம்', 'ஹாய் நன்னா' போன்ற படங்களின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய அழகிய நாயகி மிருணாள் தாக்கூர் முதன்முறையாக சூர்யாவுடன் நடிக்க இருக்கிறார். மேலும், சமீபத்தில் 'சப்த சாகர ததி' படத்தின் மூலம் புகழ் பெற்ற ருக்மணி வசந்தும் இப்படத்தில் இணைய இருக்கிறார்.  ஆஸ்கர் விருது பெற்ற பரபரப்பான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.


தற்போது சூர்யா ரசிகர்களின் கவனமெல்லாம் ‘கங்குவா’ மீதுதான் இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் இதுவே முதல் பான் இந்தியா படம் என்பதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்படம் ஹைப்பை பெற்று வெற்றி பெறுமா? அதைப் பார்க்க வேண்டும். சூர்யா 44 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இனி 45 திரைப்படத்திற்க்கான பணியில் இறங்குவார். 


Advertisement

Advertisement