• Dec 25 2024

வலிக்குதுடா.. வலிக்குது..!! RJ பாலாஜியின் கதறலோடு ரிலீஸான சொர்க்கவாசல் டிரைலர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் தான் ஆர். ஜே பாலாஜி. இவர் ரேடியோ ஜாக்கி ஆக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராகவும் ரசிகர்களை வியப்பூட்டி வருகின்றார்.

தமிழில் வெளியான நானும் ரவுடிதான், எல்கேஜி, ரன் பேபி ரன், மூக்குத்தி அம்மன், புகழ் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இவரது காமெடி கலந்த நடிப்பு, பலரையும் சிரிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். இறுதியாக இவர் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியானது.

இயக்குனராக அவதாரம் எடுத்த ஆர். ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி நடித்து இருந்தார். தற்போது நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியுள்ளார்.

d_i_a

பாலாஜி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் தான் சொர்க்கவாசல். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் தான்வெளியானது. இந்த படத்தின் கதையை இயக்குனருடன் தமிழ் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.


1999 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் மத்திய சிறைச்சாலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆர். ஜே பாலாஜியுடன் செல்வராகவன், பாலாஜி சக்திவேல், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் எதிர்வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement