• Dec 25 2024

உடனே சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்! மேடையில் நடந்தது என்ன!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் நுழைந்து தொகுப்பாளராக, காமெடியனாக, நடிகராக, இயக்குனராக பல அவதாரங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து அடுத்த திரைப்படத்தினை இயக்கவுள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பற்றி முக்கியமான விடயத்தினை கூறியுள்ளார்.  இன்று முன்னணி நடிகராகவும், வசூல் நாயகனாகவும் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன், உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.


அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவா. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து  ஆர்.ஜே. பாலாஜி பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இதில் " நான் ஒரு Mock(கேலி) விருது விழா ஒன்றில் அனைத்து பிரபலங்களையும் கலாய்க்கும் வகையில் நான் சில விஷயங்களை செய்தேன். 


சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் எமோஷனலாக பேசியதை கேலி கிண்டல் செய்யும் விதத்தில் நான் பேசினேன். அதை நான் தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது என தவறாக தெரிந்தது. அதனால் உடனடியாக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்" என ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement