• Jul 21 2026

ஆர்.ஜே. பாலாஜி போட்ட ஸ்கெட்ச்.! சூர்யாவின் கேரியரில் இது வேற லெவல் சம்பவம்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா – திரிஷா கூட்டணி மீண்டும் திரையில் இணைவது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


மேலும், யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல் தெய்வமான கருப்புசாமியை மையமாகக் கொண்டு கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வரும் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் தற்போது தீவிர புரமோஷன் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், “கருப்பு” திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குடும்பம் முழுவதும் பார்க்கக்கூடியதுடன், சில த்ரில் அம்சங்களும் உள்ள படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement