• May 24 2026

த்ரிஷா அண்ணி.. த்ரிஷா அண்ணி.. நாளை விஜயை..? சுசித்ரா வெளியிட்ட அதிரடி பாடல்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தனது முதல் அரசியல் முயற்சியிலேயே நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வரலாற்று வெற்றி பெற்றது.

இந்த தருணத்தில், விஜய்க்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் நேரில் சந்தித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், நேற்று விஜய் முதல்வர் ஆனதும் விஜய்யின் இல்லத்தில் த்ரிஷாவின் வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

நேற்று (மே 4) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை த்ரிஷா, காலை திருப்பதி தரிசனத்துக்குப் பிறகு நேரடியாக சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு சென்றார்.


வெள்ளை நிற காரில் வந்த த்ரிஷா, பிங்க் நிற உடையில் புன்னகையுடன் காட்சியளித்தார். அவர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. 

ஒருபுறம் அரசியல் வெற்றியின் கொண்டாட்டம், மறுபுறம் நெருங்கிய தோழியின் பிறந்தநாள் சந்திப்பு—இரண்டுமே இணைந்து விஜய் இல்லத்தை விழாக்கோலமாக மாற்றியுள்ளது.

இந்த சந்திப்பு அவர்கள் இருவரையும் சுற்றியுள்ள பழைய வதந்திகள் மீண்டும் எழ காரணமாகி, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

இந்த நிலையில், பாடகி சுசித்ரா திரிஷாவுக்கு பாடல் ஒன்றை பாடிக் காட்டியுள்ளார். பலரும் தன்னை இந்த எலக்சன் முடிவுக்கு ஒரு பாட்டு பாட சொல்லிக் கேட்டதால் நான் பாட போகிறேன் என்று பாடியுள்ளார். இதோ அவர் பாடிய பாடல்.

Advertisement

Advertisement