• Dec 26 2024

அக்ரிமெண்ட்ட நல்லா பாருங்க சார்.. இசையமைக்கவில்லை என்ற சொன்ன யுவனுக்கு ஆர்கே சுரேஷ் பதில்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் நடித்து இயக்கும்  ’தென்மாவட்டம்என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த ஃபர்ஸ்ட் போஸ்டரில் இசை யுவன் சங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் இந்த படத்தில் தான் இசையமைக்கவில்லை என்றும் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று யாரும் என்னை அணுகவில்லை என்றும் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் அவர்களுக்கு திரையுலகில் இருந்தும் ரசிகர்கள் மத்தியில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வந்தன.

ஒரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமலே அவரது பெயரை போஸ்டரில் எப்படி பயன்படுத்தலாம்? என்ற கேள்வியும் எழுந்தது. இதனை அடுத்து அவர் மீது யுவன் சங்கர் ராஜா நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பதிவுக்கு ஆர் கே சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.



அந்த விளக்கத்தில்யுவன் சங்கர் ராஜா அவர்களே, நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க  போவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ளீர்கள், தயவு செய்து அந்த ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்தி பாருங்கள்என்று பதிவு செய்துள்ளார்.

ஒருவேளை நீண்ட வருடங்களுக்கு முன் ஏதாவது ஒரு படத்திற்கு ஒப்பந்தம் போட்டு அதை யுவன் சங்கர் ராஜா மறந்து இருப்பாரா அல்லது வேறு என்ன நடந்திருக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆர்கே சுரேஷின் இந்த பதிவுக்கு இன்னும் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து பதில் வரவில்லை என்பதால் அவரது பதிலை அடுத்தே இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வரும். யுவன் சங்கர் ராஜா அல்லது ஆர்கே சுரேஷ் இருவரில் யாரோ ஒருவர் பொய் சொல்கிறார்கள், அது யார் என்பது கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும் என்றும் நெட்டிசன்கள் இந்த பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement