• Dec 25 2024

பயம் விட்டுப்போச்சா ரோகிணி..?? முத்து கொடுத்த அதிர்ச்சியில் விஜயா எடுத்த முடிவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவிடம் சத்யாவின் கேஸை வாபஸ் வாங்குமாறு வக்கீல் பேசுகின்றார். ஆனாலும் தனக்கு இதில் என்ன லாபம் என்று கேட்க, தான் 50,000 தருவதாக வக்கீல் சொல்கின்றார். அதற்கு 50 ஆயிரம் காணாது இரண்டு லட்சம் வேண்டும் என்று பேசி முடிக்கின்றார் விஜயா.

அதன் பின்பு  குறித்த வக்கீல் முத்துவுக்கு போன் பண்ணி விஜயா சத்யாவின் கேஸை வாபஸ் வாங்கியதாக சொல்லுகின்றார். இதனால் முத்து வீட்டில் துள்ளி குதிக்கின்றார். அண்ணாமலையும் தான் சொன்னபோது வாபஸ் வாங்காத விஜயா, இப்போது எப்படி வாபஸ் வாங்கினார் என்று யோசிக்கிறார். ரோகிணிக்கும் இது அதிர்ச்சியாக காணப்படுகிறது.

d_i_a

இதை தொடர்ந்து முத்துவும் மீனாவும் அம்மா வீட்டுக்கு செல்ல, அங்கு சத்யா மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றார். சத்யாவின் அம்மாவும் விஜயாவிடம் சென்று நன்றி சொல்ல முனைகின்றார். மேலும் சத்யாவுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து முத்து செய்த கடமைகளை எடுத்துச் சொல்லுகின்றார்.


இன்னொரு பக்கம் வித்யா வீட்டுக்கு சென்ற ரோகிணி விஜயா கேஸை வாபஸ் வாங்கியதை பற்றி சொல்லுகின்றார். ஆனாலும் இதில் ஏதோ நடந்திருக்கின்றது, மீனா குடும்பத்தை அவர் சும்மா விட மாட்டார். ஒன்று விஜயா எதுவும் பயப்பட்டு கேசை வாபஸ் வாங்கியிருக்க வேண்டும் இல்லை என்றால் இதில் எதும் அவருக்கு லாபம் கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்.

இறுதியாக சிட்டியிடம் இருந்த பிஏ தனக்கு ஒரே ரூமுக்குள் இருக்க போர் அடிப்பதாகவும் தான் வெளியே போய் தம் அடித்து விட்டு வருவதாகவும் சொல்ல, ரோகிணி இன்னும் காசு தரவில்லை.  அதனால உன்னை வெளியே விட முடியாது என்று சொல்லுகின்றார். ஆனாலும் ரோகிணி ஒரு ஏமாற்றுக்காரி என்று பிஏ சொல்ல, சிட்டி ரோகினியை மிரட்டுவதற்கு ஐடியா போடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement