• Dec 25 2024

பங்க்ஷனுக்கு வரும் ரோகிணியின் அழையா விருந்தாளி! ஸ்ருதி அம்மாவின் திட்டத்தை முறியடிப்பாரா முத்து?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் விழா பிரம்மாண்டமாக காட்டப்படுகிறது.  முத்துவும் மீனாவும் ஹோட்டலுக்கு வரும் போது அங்கு வாசலில் நிற்கும் ஸ்ருதியின்  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வணக்கம் வைத்துவிட்டு நேரே  உள்ளே சென்று வாயில் விரலை வைத்தவாறு மீனாவுடன் அமர்ந்து இருக்கிறார்.

மறுபக்கம் ரோகிணி முத்துவை தூண்டி விடுவதற்காக ஒரு நபரை செட் பண்ணி, அவரை குடிக்க வைத்து, அவரே பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்ற வகையில் பிளான் ஒன்றை போடுகிறார். அந்த நபரும் முத்துவுக்கு அருகில் போய் அமர்ந்து கொள்கிறார்.


இன்னொரு பக்கம் பங்க்ஷன் முடியிறதுக்குள்ள அந்த முத்துவ கோபப்பட வைக்கணும்  என ஸ்ருதியின் அம்மா ரவுடிகளிடம் சொல்கிறார். மேலும் அவன் மேல அவங்க குடும்பத்துக்கு வெறுப்பு வரணும், அந்த அளவுக்கு அவனை ஏதாவது செய்யணும். இத வச்சு நம்ம பொண்ணையும் மாப்பிள்ளையும் பிரிச்சுக்கொண்டு நம்ம வீட்டுக்கு கூட்டி போகணும் என்ன சொல்கிறார்.

இதனால், இவர்கள் இருவரின் சூழ்ச்சியில் முத்து சிக்குவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் எனக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக் கொள்வேன் ஆனால் அப்பாவுக்கு எதுவும் என்டா பொறுத்துக் கொள்ள மாட்டேன் என முத்து சொல்லி உள்ளார். ஸ்ருதியின் அப்பாவும் அண்ணாமலையிடம் வம்பு இழுக்க செல்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

இதேவேளை, இந்த பங்க்ஷனுக்கு ரோகிணியின் அம்மா அல்லது ரோகிணியின் முதல் கணவர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement