• Dec 25 2024

அடி தூள் தி கோட்' படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

கேரளாவில் நடந்த த கோட் படத்தின் படப்பிடிப்பை முடித்து இன்று சென்னை திரும்பினார் நடிகர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் த கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் முக்கிய காட்ச்சிகளை இந்த இடத்திலே 3 நாட்கள் சூட் செய்யப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பினை முடித்து நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் விமானநிலையத்திற்கு வந்திருந்தனர்.


தமிழக வெற்றி கழகம் என்ற கட்ச்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்னும் 2 படங்களில் நடித்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். விஜய் இதுவரையில் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தநிலையில் தற்போது அவர் நடித்து வரும் த கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் நடிகர் விஜய் இனி நடிக்க இருக்கும் கடைசி திரைப்படத்தில் அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வழங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Advertisement