• Dec 27 2024

தூய்மை பணியாளர்களை கிட்ட வராதே என்று சொன்னாரா நடிகை ரோஜா? திருச்செந்தூரில் அதிர்ச்சி செயல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை ரோஜா சமீபத்தில் திருச்செந்தூருக்கு தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது அவருடன் செல்பி எடுக்க பலர் முன் வந்தனர். அவர்களுக்கெல்லாம் சந்தோஷமாக செல்ஃபி போஸ் கொடுத்த ரோஜா, தூய்மை பணியாளர்கள் வந்தபோது மட்டும் பக்கத்தில் வர வேண்டாம் என்று சில அடி தூரத்தில் நிற்க வைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா அதன் பின்னர் அரசியல்வாதியாக மாறினார் என்பதும் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திராவில் அமைச்சராக இருந்தார் என்பது தெரிந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது கணவர் செல்வமணியுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த போது அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு பிரசாதங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் கோவில் அதிகாரிகள், கோவில் உள்ள மற்றவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அப்போது அங்கு தூய்மை பணியாளர்கள் ரோஜாவுடன் செல்பி எடுக்க வந்தபோது நில் என்று கையை ஜாடை செய்த ரோஜா, சில அடி தூரம் தள்ளி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். மற்றவர்களுடன் சர்வ சாதாரணமாக அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ரோஜா தூய்மை பணியாளர்களிடம் மட்டும் இவ்வாறு நடந்து கொண்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ’சமூக வலைதளத்தில் பதிவு செய்வது போல் ரோஜா யாரையும் நில் என்று சொல்லவில்லை, இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, ரோஜா அனைவரையும் சமமாக தான் பார்ப்பார்’ என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement