• Jan 06 2025

மாமனாருக்கு ராஜமரியாதை.. மாமியாருக்கு துடப்பக்கட்டையா? சரண்யாவின் லுக்கை பாருங்க..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்தான் சரண்யா துராடி. துருதுரு என இருக்கும் இவரது நடிப்பும், சிமிட்டும் கண்களும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது.

ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளராகவும், வாசிப்பாளராகவும் இருந்த இவர், அதற்குப் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் ஆகிய சீரியல்களில் நடித்தார். ஆனால் அந்த சீரியல்கள் எதிர்பார்க்காத விதமாக திடீரென முடிந்து விட்டன.

அதற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட சரண்யா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 என்ற சீரியலில் மருமகளாக நடித்து வருகிறார்.


இவர் இந்த வீட்டிற்குள் வந்த பிறகு தான் பிரச்சனைகள் எழுவதற்கு காரணமாக உள்ளன. அதிலும் இவர் பாண்டியனின் பக்கம் அதிகமாக சப்போர்ட் பண்ணி, கோமதி, ராஜி, மீனாவின் வெறுப்பை சம்பாதித்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு முன்னாள் நின்று போட்டோ ஷூட் செய்துள்ளார் சரண்யா துராடி.

குறித்த போட்டோக்களில் கோமதிக்கு பின்னால் துடப்பக்கட்டையோடு நிற்கும் சரண்யா, பாண்டியனுக்கு குடை பிடித்தவாறு ஜாலியாக நிற்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல அவரை கழுவி ஊற்றி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement