• Apr 18 2025

என்னது நடிகை த்ரிஷா கர்ப்பமா? யாரு பார்த்த வேலைடா அது..? சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா நாற்பது வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக இருக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கு பிறகு அவர் விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்த நிலையில் தற்போது அஜித் உடன் ’விடாமுயற்சி’ கமல்ஹாசன் உடன் ‘தக்ஃலைப்’, மோகன்லாலுடன் ’ராம் மற்றும் நிவின் பாலுடன் ’ஐடென்டிட்டி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை இருப்பதாக கூறப்படுகிறது.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். அந்த படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது கோட் படத்தில் கேமியோ ரோலில் நடிகை த்ரிஷா நடித்துள்ளதாக பேசப்பட்டது.


ஏற்கனவே ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலேயே த்ரிஷாவை ஒரு பாடலுக்கு ஆட அட்லீ அழைத்தாராம். ஆனாலும் அவர் அப்போது அதற்கு ஒத்துக் கொள்ள இல்லையாம். கோட் படத்திற்கு மட்டும் ஓகே சொல்லி உள்ளாராம்.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகை த்ரிஷாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


அதாவது, குறித்த புகைப்படத்தில் சாரி கட்டி இருக்கும் நடிகை த்ரிஷா கர்ப்பமாக இருப்பது போல தெரிகிறது. அவரது வயிற்றை பார்த்த ரசிகர்கள் என்னடா இது  த்ரிஷாக்கு வந்த சோதனை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

குறித்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதோ அல்லது ஷூட்டிங் எதற்கும் அவ்வாறு எடுக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனாலும் அதை பார்த்தவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement