பிரபல விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல எலிமினேட் ஆகி வெளியே செல்பவர்களை வைத்து பன் பண்ணும் விதமாக பிக்பாஸ் பன்அன்லிமிட்டட் ஷோ நடைபெறுகிறது. இதனை சபரி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது செம காமெடியான வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் பன்அன்லிமிட்டட் ஷோ தொகுப்பாளர் சபரி இதுவரை காலமும் எலிமினேஷன் ஆகி வெளியே வந்த போட்டியாளர்களை வைத்து சரமாரியான கேள்விகளை கேட்டு போட்டியாளர்களை திக்குமுக்காக வைத்திருப்பார். இந்நிலையில் தற்போது வெளியான வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த விடயங்களை சுவாரஷ்யமா கூறியுள்ளார். " இந்த சொந்தகாரவங்க வந்தாலே ஒரே தொல்லையா இருக்கு. ஒன்னு அவமானம் படுத்துறங்க இல்லை அழவைக்கிறாங்க என்று காமெடியாக பேசியுள்ளார்.
மேலும் "பிக் பாஸ் சீசன் 8 வாரம் 12 அதுனால பன் எல்லாம் எண்டு, ரஞ்சித் அண்ணே இருந்தாரு சாமியா அவரே எலிமினேட் ஆகிட்டாரு பாருய்யா, நாமினேஷன் பாஸ்-ஜெயிச்ச ரயான் தான் மாஸ், முத்து பவிமேல காட்டுன அக்கறை அதுனால பிக் பாஸ் கிட்ட மாட்டுற, வீட்டுக்குள்ள வந்தாங்க பெத்தவங்க அழ ஆரம்பிச்சாங்க மத்தவங்க, தீபக் மனைவி ராக்கிங்கு, வந்தவங்க எல்லாம் திட்டுனதுல அருண் ரொம்ப ஷோக்கிங்கு, குடும்பங்கள் கொண்டாடுச்சி- இப்போ பிக்பாஸ் வீடு ரெண்டாகிடுச்சி" என்று சுவாரஷ்யமாக கூறிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!