இயக்குநர் பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் பாலா சில பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். சமீபத்திய பேட்டியில் நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான் ஆனால் சில காரணங்களினால் அவர் படத்தில் இருந்து விலகிவிடவே அதில் தற்போது அருண்விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கேள்வி எழுப்பினார். " சார் உங்களுக்கும் சூர்யாசாருக்கும் இடையே பிரச்சினை, அதனாலதான் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டாரு என்று பலவாறு சோசியல் மீடியாக்களில் செய்திகள் வந்தது அது குறித்து நீங்களும் சரி சூர்யாவும் சரி எதுவுமே பேசவில்லை, அப்படி என்னத்தான் நடந்தது சொல்லுங்க" என்று கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த பாலா இவ்வாறு கூறினார். "எனக்கும் சூர்யாவுக்கும் இடையில் பிரச்சினை இல்லை. மெய்ன் காரணம் என்ன என்றால் நாங்க சூட் செய்யவேண்டிய இடத்துல சரியான மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்த இடத்தில் தான் செய்து ஆகவேண்டும் அது லைவ் லொகேஷன். சூர்யா வாறதுனால அங்க மக்களை கட்டுப்படுத்தமுடியவில்லை" என்று கூறினார்.
மேலும் "அதுக்கு அப்புறம் தான் நாங்க பேசினோம். அதுக்கு பிறகு இதிலிருந்து விளக்கினார் சூர்யா. நாங்க அப்போதுள்ள இருந்து பேசிட்டு தான் இருக்கோம். சூர்யா கிட்ட நான் சொல்லிட்டேன் இதுபத்தி பேசுற மீடியா பேசட்டும் நானும் ஒன்றும் சொல்லமாட்டேன் நீயும் சொல்லவேண்டாம். அத சொல்லணும் என்று அவசியம் இல்லை" என்று கூறியுள்ளார் பாலா.
Listen News!