மலையாள திரையுலகின் அழகிய பொக்கிஷமாக திகழ்ந்ததுடன் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளவர் நடிகை சாய் பல்லவி. இவர் நடித்த முதலாவது மலையாள படமான "பிரேமம்" ஹிட் ஆகியதனைத் தொடர்ந்து அதிகளவான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
அத்தகைய சாய் பல்லவி இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். சமூக வலைத்தளங்கள் முழுவதும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சாய் பல்லவியின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவலின் படி, ரூ.47 கோடி வரை சாய்பல்லவியிடம் மொத்தமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இது அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சாய் பல்லவி தற்பொழுது ஒரு திரைப்படத்திற்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் பெற்றுக் கொள்கிறார் எனவும் சிலர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இது பல முன்னணி நடிகைகளைவிட கூடுதலாகவே இருக்கின்றது. எனினும் அதற்கேற்ற திறமை, ரசிகர்களின் ஆதரவு ஆகியவை சாய்பல்லவியிடம் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!