• Apr 07 2026

உணர்வுபூர்வமான கிளைமாக்ஸுடன் முடிந்த சக்திவேல்.! இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் , சின்ன மருமகள், சக்திவேல் உட்பட பல சீரியல்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த வகையில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் சில சீரியல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று நான்கு, ஐந்து ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகியதும் உண்டு.

அதே நேரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளை பெற்ற சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாக இருப்பினும், சட்டென முடித்துவிடும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சக்திவேல் சீரியல் தற்போது சுமார் 707 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான Mann Kee Awaaz Pratigya என்ற சீரியலின் ரீமேக்காக இந்த தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. 


இதன் முதல் பாகத்தில் பிரவீன் ஆதித்யா மற்றும் அஞ்சலி பாஸ்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர். இதன் முதலாவது பாகம் 2025ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டது. 

சுமார் ஏழு வருடங்களுக்குப் பின் நடைபெறும் கதையாக இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. இதில் நாயகனாக விக்ரம் ஸ்ரீ நடித்தார். இவ்வாறான நிலையிலேயே நேற்றுடன் சக்திவேல் சீரியலின் இரண்டாவது பாகம் 707 எபிசோடுகளுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த சீரியலின் இறுதி கிளைமாக்ஸ் காட்சியில் சக்திவேலிடம் "இவள்தான் நம்முடைய மகள்" என சக்தி காட்ட, அங்கு நடைபெறும் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் சீரியல் முடிவுக்கு வந்தது.



Advertisement

Advertisement