• Dec 25 2024

சல்மான் கான் வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு! பாலிவுட்டில் பேரதிர்ச்சி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சல்மான் கான். இவர் பாலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் ஒரு நடிகராக காணப்படுகிறார்.

1988 ஆம் ஆண்டு வெளியான மைனே பியார் கியா என்ற  திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்த இவர், ஐஸ்வர்யா ராயை காதலித்தார், ஆனாலும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் பிரிந்தார்கள். அவரைத் தொடர்ந்து கத்ரீனா கைஃப், சோனாக்ஷி சின்ஹா ஆகிய பல நடிகைகளை காதலித்தார். ஆனால் யாரையும் தற்போது வரையில்  திருமணம் செய்யவில்லை. அவர் முரட்டு சிங்கிளாகவே காணப்படுகிறார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் டைகர் படம் வெளியானது. இந்த படம் ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ஷாருக்கானும் கிருத்திக் ரோஷனும்  கேமியா ரோலில் முக்கியமாக நடித்திருந்தார்கள்.


இந்த நிலையில், பாலிவுட்டில் பிரபல நடிகரான சல்மான்கானின்  மும்பை இல்லத்துக்கு வெளியே, இன்றைய தினம் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளதாக பரப்பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அதிகாலை 5 மணி அளவில் சல்மான் கானின் வீட்டுக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதோடு, அந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு வேகமாக ஓடி உள்ளார்களாம். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement