• Dec 26 2024

சல்மான் கானின் 'டைகர் 3' படம் வசூலில் சரிந்தது..! மொத்த வசூலே இவ்வளவு தானா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சல்மான் கான் நடித்த டைகர் 3 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, முதல் மூன்று நாளும் ஓரளவு வசூலை பெற்று வந்த டைகர் 3 திரைப்படம், நான்காவது நாளில் 45 சதவிகிதம் சரிந்து உள்ளது. 

டைகர் 3 படத்தில் சல்மான் கான் தவிர ஷாருக் கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

இந்த படம் முதல் நாளிலேயே பாசிட்டிவ் டாக் அடித்தது. இதனால் இரண்டு மூன்று நாட்களில் வசூல் அதிகரித்தது. இந்தியாவில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


பின்னர் மூன்றாம் நாளில் ரூ.48 கோடியும் வசூலித்து உள்ளது. ஆனால் நான்காவது நாளில் ரூ.23 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஆக மொத்தமாக இப்படம் நான்கு நாட்களில் ரூ 170 கோடி வசூல் செய்துள்ளது. 

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் பதான்இ ஜவான் மற்றும் கடார் 2 ஆகிய படங்கள் சில பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைக் கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement